இடுகைகள்

ஜூலை, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர் வரலாறு

தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை கி.பி. 1 முதல் - கி.பி. 1676 வரை கி.பி. 1677 முதல் - கி.பி. 1922 வரை கி.பி. 1923 முதல் - கி.பி. 2011 வரை

வில்வம்

படம்
வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்துநோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும்காணப்படும் மரவகையாகும். சைவ கடவுளான சிவனை வில்வ இலை கொண்டே பூஜைசெய்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்கும் குணம் வில்வ இலைக்கு உண்டு. இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு. இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டை, ஓடு வேர்ப்பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. கற்ப முறைப்படி வில்வத்தின் சமூலத்தை சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். வில்வ கற்பம் பல்லவம்பூ பிஞ்சின் பழநிரியம்சம் முறையே வல்லவம் மேகமந்த மாகுன்மம்-செல்லுகின்ற நோக்மருள் விந்துநட்ட நூறு மகுத்தவர்கட் காக்கமருள் வில்லுவத்தி லாம் (அகத்தியர் குணபாடம்) பொருள் - வில்வத்தளிர் எல்லா மேக நோய்களையும் குணப் படுத்தும். வில்வப் பூ- மந்தத்தைக் குணப்படுத்தும். பிஞ்சு - குன்மத்தை போக்கும் பழம் - கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். பிசின் - விந்துவை கெட்டிப் படுத்தி அதன் குறையை நீக்கும். வில்

தூதுவளை

படம்
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும். இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும். கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரை, திரை, மூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும். சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பிணியில்லாபெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள். அதுபோல் இந்த கற்ப மருந்தை சாப்பிடும் காலத்தில் தூய்மையான மனதுடன்இருக்க வேண்டும். தெய்வ சிந்தனை வேண்டும். மனம் தூய்மையானால் கற்ப மருந்துசிறந்த பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக கற்