இடுகைகள்

பிப்ரவரி, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

ஏன்? எதற்கு? எப்படி? ஏன்? எதற்கு? எப்படி? – இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினால்தான் இதுதான், இப்படித்தான் என்று இதுவரை குறுகிய வட்டத்திற்குள் இருந்த நாம் வெளியேறிப் பரந்து விரிந்த உலகில் சிறகடித்துப் பறந்து, சித்த மருத்துவத்தினையும் சிறகடித்துப் பறக்கச் செய்யலாம். வினாக்களும், விடைத் தேடல்களுமே நம் அறிவினைப் புதுப்பிக்கும், பிரகாசமடையச் செய்யும் வழிமுறைகள் ஆகும். என் மனத்தில் உதயமான சில வினாக்களும் அவற்றிற்கான விடை தேடலில் கிடைத்த விடைகளும் சில. 1) தோல் நோய் உள்ளவர்கள் ஏன் முட்டை சாப்பிடக் கூடாது? முட்டை வெண்கருவில் உள்ள அவிடின் (Avidine) என்ற புரத் (Protein) நம் வயிற்றில் குடல் நுண்ணுயிரிகளால் (Intestinal bacterial) உற்பத்திச் செய்யப்படும் பயோடின் (Biotin) என்ற உயிர்ச்சத்துடன் இணைந்து சிறு குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. பயோடின் (Biotin) தோல் வளர்ச்சியிலும், இறந்த தோலை புதுப்பிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே இரத்தத்தில் பயோடின் (Biotin) என்ற உயிர்ச்சத்து குறைந்தால், தோல் நோய்கள் ஏற்படும். ஆகையால்தான் தோல்நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடக்கூடாது – ஆதாரம் : Bio C