இடுகைகள்

தமிழர் வரலாறு

தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை கி.பி. 1 முதல் - கி.பி. 1676 வரை கி.பி. 1677 முதல் - கி.பி. 1922 வரை கி.பி. 1923 முதல் - கி.பி. 2011 வரை

வில்வம்

படம்
வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்துநோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும்காணப்படும் மரவகையாகும். சைவ கடவுளான சிவனை வில்வ இலை கொண்டே பூஜைசெய்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்கும் குணம் வில்வ இலைக்கு உண்டு. இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு. இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டை, ஓடு வேர்ப்பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. கற்ப முறைப்படி வில்வத்தின் சமூலத்தை சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். வில்வ கற்பம் பல்லவம்பூ பிஞ்சின் பழநிரியம்சம் முறையே வல்லவம் மேகமந்த மாகுன்மம்-செல்லுகின்ற நோக்மருள் விந்துநட்ட நூறு மகுத்தவர்கட் காக்கமருள் வில்லுவத்தி லாம் (அகத்தியர் குணபாடம்) பொருள் - வில்வத்தளிர் எல்லா மேக நோய்களையும் குணப் படுத்தும். வில்வப் பூ- மந்தத்தைக் குணப்படுத்தும். பிஞ்சு - குன்மத்தை போக்கும் பழம் - கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். பிசின் - விந்துவை கெட்டிப் படுத்தி அதன் குறையை நீக்கும். வில்...

தூதுவளை

படம்
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும். இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும். கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரை, திரை, மூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும். சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பிணியில்லாபெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள். அதுபோல் இந்த கற்ப மருந்தை சாப்பிடும் காலத்தில் தூய்மையான மனதுடன்இருக்க வேண்டும். தெய்வ சிந்தனை வேண்டும். மனம் தூய்மையானால் கற்ப மருந்துசிறந்த பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக கற்...

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

ஏன்? எதற்கு? எப்படி? ஏன்? எதற்கு? எப்படி? – இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினால்தான் இதுதான், இப்படித்தான் என்று இதுவரை குறுகிய வட்டத்திற்குள் இருந்த நாம் வெளியேறிப் பரந்து விரிந்த உலகில் சிறகடித்துப் பறந்து, சித்த மருத்துவத்தினையும் சிறகடித்துப் பறக்கச் செய்யலாம். வினாக்களும், விடைத் தேடல்களுமே நம் அறிவினைப் புதுப்பிக்கும், பிரகாசமடையச் செய்யும் வழிமுறைகள் ஆகும். என் மனத்தில் உதயமான சில வினாக்களும் அவற்றிற்கான விடை தேடலில் கிடைத்த விடைகளும் சில. 1) தோல் நோய் உள்ளவர்கள் ஏன் முட்டை சாப்பிடக் கூடாது? முட்டை வெண்கருவில் உள்ள அவிடின் (Avidine) என்ற புரத் (Protein) நம் வயிற்றில் குடல் நுண்ணுயிரிகளால் (Intestinal bacterial) உற்பத்திச் செய்யப்படும் பயோடின் (Biotin) என்ற உயிர்ச்சத்துடன் இணைந்து சிறு குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. பயோடின் (Biotin) தோல் வளர்ச்சியிலும், இறந்த தோலை புதுப்பிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே இரத்தத்தில் பயோடின் (Biotin) என்ற உயிர்ச்சத்து குறைந்தால், தோல் நோய்கள் ஏற்படும். ஆகையால்தான் தோல்நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடக்கூடாது – ஆதாரம் : Bio C...

மஞ்சள் மகிமை

படம்
மஞ்சள் Curcuma Longa is a plant native to India which is remarkable for being the source of its culinary spice known as Turmeric and its medicinal extract called Turmeric Extract. Botanical Classification: Family: Zingiberaceae (Ginger Family) Genus: Curcuma Species: Longa Scientific Name: Curcuma Longa Linnaeus The plant is a member of the Zingiberaceae or ginger family. It was classified by Carolus Linnaeus, a botanist of Sweden who lived in the period 1707-1778. Distribution : Botanical Features: Trunk: grows up to 1 metre. Leaves: lengthy and rectangular in shape; Flowers: lengthy white spike flowers. Root System: rhizomes. Medicinal Properties: anti-oxidant; anti-inflammatory, inhibits formation of, and breaks down, Amyloid-beta oligomers and aggregates; anti-platelet; anti-cancer: causes apoptosis in various cancer cell types including skin, colon, forestomach, duodenum and ovary; anti: -viral, -fungal, -bacterial (inhibits Helicobacter Pylori); Traditional and Modern Uses of...

சித்த மருத்துவத்தினால் முதுமையில் நிறைவாழ்வு

சித்த மருத்துவம் தென்னிந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது. ‘சித்தம்’ என்ற சொல்லானது ‘முக்தி பெறுவது’ ‘முழுமை’, ‘அடையப்படவேண்டிய பொருள்’ ‘சித்தி’ என்ற முலச் சொல்லில்லிருந்து பிறந்த்தாகும். சித்த மருத்துவத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும், முழுமையான நிறைந்த மருத்துவ அனுகுமுறையே வலியுறுத்துகிறது. சித்த மருத்துவம் என்பது நோய்யை மட்டும் கணக்கில் கொள்ளாமல் நோயாளி, சுற்றுச்சூழல், நோயாளியின் பால், வயது, பழக்கவழக்கங்கள், உணவு, உடலமைப்பு மற்றும் மனநிலை ஆகியவற்றை கொண்டு மருத்துவம் செய்கின்றது. இந்த மனித உடலானது முத்தாதுக்கள், ஏழு உடற்கட்டுகள் மற்றும் மும்மலங்களாலானது. இவற்றின் சரிவிகித நிலையால் உடல் நலமாகவும், நிலைபிறழ்ச்சியால் நோயும் உண்டாகிறது.சித்த மருந்துகள் பெரும்பாண்மையாக தாவரபொருட்களினாலும், மற்றும் கனிம, உலோகப் பொருட்களாலும் செய்யப்பட்டுள்ளது. தொண்மையான சித்த மருத்துவமானது, சித்தர்களின் அனுபவ செறிவுகளாலும், கால மாறுபாடுகளாலும் வாழ்வியல் அறிவியலாக உருப்பெற்றுள்ளது.ஒருவரின் நலத்தை உடல், மனம், ஆன்மா மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் செயல் ஒருங்கிணைப்பின் அடிப்படையில் வகுக்க...

நீரிழிவு – உணவு முறை.

படம்
நீரிழிவு சிகிச்சையில் உணவு முதலிடத்தை வகிக்கிறது. நவீன மருத்துவத்தில் நீரிழிவுக்காரர்களுக்கு உணவில் கட்டுப்பாடுகள் இருப்பதால் நமது பாரம்பரிய உணவு முறைகள் மறைந்து போயுள்ளது. ஆனால் தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு உணவு முறையை மாற்றியமைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம்நாட்டு மக்களின் சராசரி உணவு பழக்கத்தில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த உணவாகத்தான் பரிமாரப்படுக்கிறது. உணவுக்கட்டுப்பாடு என்றாலே பலர் அச்சம் கொள்கின்றனர்.இந்த உணவு முறை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்றே பெரும்பாலான நீரிழிவுக்காரர் தவறாக கருதி கொள்கின்றனர். உண்மையில் இது மிக மிக எளிதான முறை இதில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய 2 விதிகள் 1. எந்த உருவிலும் சர்க்கரையை சாப்பிடக் கூடாது. 2. மொத்த கலோரி(calorie) அளவைக் கட்டுப்படுத்துதல். நீரிழிவுக்காரர்களின் எதிரி என்று சொல்லப்படும் அரிசி உணவையே அவர்கள் சாப்பிடலாம். ஏன்னென்றால் கோதுமை, இராகி, அரிசி இம்முன்றிலுமே ஒரே அளவு மாவுச்சத்து இருப்பதே காரணம். வெள்ளை அரிசியை விட கைகுத்தல் அரிசியே சிறந்தது.ஆனால் உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளவேண்டும்.சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட...