வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்துநோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும்காணப்படும் மரவகையாகும். சைவ கடவுளான சிவனை வில்வ இலை கொண்டே பூஜைசெய்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்கும் குணம் வில்வ இலைக்கு உண்டு. இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு. இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டை, ஓடு வேர்ப்பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. கற்ப முறைப்படி வில்வத்தின் சமூலத்தை சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். வில்வ கற்பம் பல்லவம்பூ பிஞ்சின் பழநிரியம்சம் முறையே வல்லவம் மேகமந்த மாகுன்மம்-செல்லுகின்ற நோக்மருள் விந்துநட்ட நூறு மகுத்தவர்கட் காக்கமருள் வில்லுவத்தி லாம் (அகத்தியர் குணபாடம்) பொருள் - வில்வத்தளிர் எல்லா மேக நோய்களையும் குணப் படுத்தும். வில்வப் பூ- மந்தத்தைக் குணப்படுத்தும். பிஞ்சு - குன்மத்தை போக்கும் பழம் - கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். பிசின் - விந்துவை கெட்டிப் படுத்தி அதன் குறையை நீக்கும். வில்