இடுகைகள்

பழங்காலத் தெய்வ நம்பிக்கை

பழங்காலத் தெய்வ நம்பிக்கை மனிதன் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடிக் காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலகட்டத்தில் இடி, மழை, மின்னல், புயல், வெள்ளம் முதலிய இயற்கை உற்பாதங்களைக் கண்டு பெரிதும் பயந்தான். அருவிகள், ஆறுகள், காடுகள், மரங்கள், மலைகள் முதலியவற்றைக் கண்டு அஞ்சினான். அவற்றால் தன் உயிருக்குத் தீங்கு நேருமோ என அஞ்சிய அவன் “என்னை ஒன்றும் செய்து விடாதே; என்னைக் காப்பாற்று” என்று அவற்றைத் தொழுது வணங்கினான். இவற்றை மட்டுமல்லாது, ஆபத்து விளைவிக்கும் கொடிய காட்டு விலங்குகளான சிங்கம், புலி, யானை, கொடிய நச்சுப் பாம்புகள் முதலியவற்றையும் அச்சத்தால் வணங்கினான். “கரந்து பாம்பொடுங்கும் பயம்பு மாருளவே குறிக் கொண்டு மரங்ங் கொட்டி நோக்கிச் செறிதொடி விறலியர் கைதொழுஉப் பழிச்ச வறிது நெறி யொரீஇ வலஞ்செயாக் கழிமின்” - மலைபடுகடாம் 199-202 (பரலையுடைய பள்ள நிலத்தின் பரப்பிலே பாம்புகள் மறைந்து கிடக்கும் குழிகள் உள்ளன. அவற்றை மனத்தாலே குறித்துக் கொண்டு விலங்கிற்கு மரத்திலே கொட்டிப் பார்த்து, செறிந்த வளையலையுடைய விறலியர் அப் பாம்பு மனம் மகிழும்படி கையால் தொழுது வணங்கிப் போவீராக) என்ற பாணனின் கூற

தமிழர் வரலாறு கி.பி. 1923 முதல் - கி.பி. 2011 வரை

1923 தன்னாட்சி கட்சியைத் தோற்கடித்து பனகல் அரசர் தலைமையில் அமைச்சரவை செயல்பட்டது. 1924 ஜான் மார்சல் (1876-1958) சிந்து சமவெளி புதைப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார். 1925 தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம். 1926 தன்னாட்சி கட்சி ஆதரவுடன் சுயேட்சையான சுப்புராயன் அமைச்சரவையை ஏற்படுத்தினார். 1927-1981 கவிஞர் கண்ணதாசன் "சங்க இலக்கியத்தைத் தங்க இலக்கியமாய் மனதில் தங்க வைத்தவன்" இக்கவிஞன். இராமநாதபுரம் சிறுகூடற்பட்டியில் பிறந்தவர். பேரறிஞர் அண்ணா பாசறையில் பாடம் படித்தவர். "காற்றுக்கு மரணமில்லை, கண்ணதாசன் கவிதைக்கும் மரணமில்லை". ஆனாலும் இவர் 1981ல் அமெரிக்காவில் தன் உடல் துறந்தார். 1930 முனுசாமி தலைமையில் நீதிக் கட்சி பதவிக்கு வந்தது. 1930-1959 பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் மக்கள் கவிஞன். புரட்சி கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். தன் பாடல்களால் தமிழ்த் திரையுலகில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார். 1931 காமராஜர் மீது கொலைசதி, வெடி குண்டு வழக்கு. வ.உ.சி. வாதாடி காமராஜரையும் தொண்டர்களையும் காப்பாற்றினார் 1932

தமிழர் வரலாறு கி.பி. 1677 முதல் - கி.பி. 1922 வரை

கி.பி. 1677 விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது. கி.பி. 1682-1689 அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார். கி.பி. 1688-1706 இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது. கி.பி. 1700 உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165 மில்லியன். கி.பி. 1705-1742 தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த காலம். தாயுமானவர் பாடல்கள் பக்தி மார்க்கம் வழியானவை. புதைபடிவ மனிதர்கள். மேல் வரிசை - மாக்ன்னியன் நடு வரிசை - நியாண்டெர்தல் கீழ் வரிசை - சீணாந்திரோப

தமிழர் வரலாறு கி.பி. 1 முதல் - கி.பி. 1676 வரை

கி.பி. 1 - 20 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல்  கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து  நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார்  வாழ்ந்த காலம். கி.பி. 10 உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்)  மக்கட்தொகை 35 மில்லியன். கி.பி. 21 - 42 குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை,  காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம். கி.பி. 42 - 100 சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன்  நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை,  இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன்,  பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன்  சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின்  அற்புதகாலம். கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்)  மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் (

தமிழர் வரலாறு, கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை

கி.மு 14 பில்லியன்  பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன்  பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன்  நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித  இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில்  மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித்  திரிந்தது. கி.மு. 360000  முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு  வந்தனர். கி.மு. 300000 யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர். கி.மு. 100000 நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள்  வாழ்ந்தனர். கி.மு. 75000  கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன். கி.மு. 50000 தமிழ்மொழியின் தோற்றம்.  கி.மு. 50000 - 35000  தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு. கி.மு. 35000 - 20000  ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம். கி-மு. 20000 - 10000  ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரி